இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு பொலிஸாரின் அவசர எச்சரிக்கை

 


சமூக வலைத்தளங்களில் வெறுக்கத்தக்க மற்றும் வெறுப்புணர்ச்சியுடன் comment செய்தால் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமூக ஊடகங்கள் ஊடாக வெறுக்கத்தக்க மற்றும் வெறுப்புணர்ச்சியுடன் பதிவுகள் மற்றும் கருத்துக்களை பரப்பியமைக்காக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

23ஆம் திகதியன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி, பேஸ்புக் சமூக ஊடக வலையமைப்பில் வெளியிடப்பட்ட விளம்பரம் தொடர்பில் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தி, பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்ட நபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மாகாண கணினி குற்றப் புலனாய்வு உப பிரிவினரால் விசாரிக்கப்பட்டு நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

காலி மாவட்டம், கோட்டையைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

  தனது பேஸ்புக் கணக்கில் மற்றுமொருவர் வெளியிட்ட விளம்பரத்திற்கு தீங்கிழைத்த மற்றும் வெறுப்புணர்ச்சியுடன் comment செய்த குற்றச்சாட்டில் அவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஜூலை 18ஆம் திகதி அறிவிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளுக்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

Post a Comment

0 Comments