எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விசேட அறிவிப்பு - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Tuesday, July 26, 2022

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விசேட அறிவிப்பு

 


chassis எண் கொண்ட வாகனங்களை பதிவு செய்ய முடியாதவர்கள் எதிர்வரும் வௌ்ளிக் கிழமை முதல் வாகன வருமான அனுமதிப் பத்திரத்துடன் பதிவு செய்ய முடியும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல். 49 cc இயந்திர திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை வைத்துள்ளவர்கள் தங்களது அனுமதிப் பத்திரத்தை பெற மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், தோட்ட உபகரணங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் உபகரணங்களை பயன்படுத்துவோர் தங்களின் வாராந்த எரிபொருள் தேவைகளை அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறும் அவற்றை பெறுவதற்கான எரிபொருள் நிலையங்களை பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.    

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages