QR code QR குறியீடு (Quick response code) அறிமுகப்படுத்தியது யார்?

 


இந்த நாட்களில் அதிகம் பேசப்படும் சொல் விஷேடமாக தற்போது ஏரிபொருள் பகிர்ந்தளிப்பை சீரமைக்க அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு இந்த QR முறைமையில் வினியோகித்தல்.


இதனை 1994 ஆம் ஆண்டு ஜப்பானிய பொறியியலாளர் திரு. மசாஹிரோ ஹரா Masahiro Hara என்பவர் உருவாக்கினார். 1957 இல் பிறந்த இவர் ஒரு பொறியியலாளர். ஜப்பானிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமான "டென்சோ வேவ்" Denso Wave இன் அதிவேக இயந்திரங்களின் செயல்திறனை கணினிகள் மூலம் கண்காணிக்க மசாஹிரோவால் இந்த QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும்ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் Japan International Cooperation Agency நைகரில் கல்வியை மேம்படுத்துவதற்கான ஜப்பான் சர்வதேச கூட்டுறவு ஏஜென்சியின் "அனைவருக்கும் பள்ளி" School For All திட்டத்தின் தலைமை பொறியாளர் மற்றும் ஆலோசகராகவும் ஹாரா இருந்துள்ளார்.

இந்த QR குறியீட்டின் விஷேட அம்சம் அதிக டேட்டாவையும் அதிகபட்ச தரவுகளையும் சேமிக்கூடியதுடன் இதற்கு முன்னைய தரவு குறியீட்டிலும் பார்க்க பத்து மடங்கு வேகமாக வாசிக்க கூடியது. மேலும்இந்த QR குறியீட்டில் 7000 “கணினி எழுத்துக்கள்” சேமிக்க முடியும்.

குறுகிய காலத்தில் உலகம் முழுவதும் பரவிய இந்த QR குறியீடு டேட்டாபேஸ் சிஸ்டம், தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத குறியீட்டு அமைப்பாக மாறியுள்ளது.

-Business Wire-

Post a Comment

0 Comments