அமைச்சர் காஞ்சன யார் இவர்? இவரின் கல்வி தகமைதான் என்ன? QR CODE எப்படி சாத்தியமானது? எரிசக்தி அமைச்சுக்கு தகுதியானவரா? - KALPITIYA VOICE - THE TRUTH

Monday, August 8, 2022

அமைச்சர் காஞ்சன யார் இவர்? இவரின் கல்வி தகமைதான் என்ன? QR CODE எப்படி சாத்தியமானது? எரிசக்தி அமைச்சுக்கு தகுதியானவரா?

 


அமைச்சர் காஞ்சன , இவர் எந்த கட்சியாகவும் இருந்து விட்டு போகட்டும் , அது எமக்கு பிடித்ததோ , பிடிப்பில்லையோ என்பது ஒரு புறம் இருக்கட்டும்.


ஆனால் , பலவீனமான ஒரு விடயத்தை தலையிலே சுமந்து , அதிலே வரும் சவால்களுக்கும் , விமர்சனங்களுக்கும் முகம் கொடுத்தவாறு , அதனை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது தலைமைத்துவ பண்பின் ஒரு அடையாளமே.

காஞ்சனவை பொறுத்த வரை ஒரு இளம் அரசியல்வாதி.

1982 லேயே பிறந்திருக்கிறார் , தற்போதைக்கு 40 வயதை தான் எட்டியிருக்கிறார்.

2009 - 2015 வரையிலே தென் மாகாண சபை உறுப்பினர் , அப்படியெனில் 27 வயதிலேயே மாகாண சபைக்குள் நுழைந்துள்ளார்.

2015 ம் ஆண்டு தனது 33 வது வயதிலேயே பாராளுமன்றம் நுழைந்து , 2020 லே நடந்த தேர்தலிலும் மீண்டும் பாராளுமன்றம் நுழைந்திருக்கார்.

குற்றுயிராய் கிடந்த நம் நாட்டின் பெற்றோலியத்துறையும் , எரிசக்தி துறையும் , சிறு வயதிலேயே இவருக்கு அமைச்சாய் கிடைத்துள்ளது.

இது இவரது எதிர்க்கால அரசியலின் பிரகாசத்திற்கு கிடைத்த வரமும் , வாய்ப்புமே எனலாம்.

நல்லதொரு அனுபவத்தை பெற்றுக்கொண்டிருக்கிறார்.

கடினமான சூழ்நிலைகள் , நல்ல அனுபவங்களை நிச்சயம் கொடுக்கும் என்பதே யதார்த்தம்.

காஞ்சன ஒரு அரசியல் வாரிசு , அதோடு புகழ்ப்பெற்ற ரோயல் கல்லூரி , Trinity கல்லூரி என்பவற்றிலே கல்வியை முடித்தவர்.

அவுஸ்திரேலியாவின் Monash University லே பொருளாதார துறையிலே பட்டப்படிப்பையும் முடித்துள்ளார்.

Economic Crisis சந்தர்ப்பத்திலே , Economic துறையிலே கற்ற ஒருவருக்கு ,Economic லே தாக்கம் செலுத்தும் ஒரு அமைச்சும் கிடைக்கப்பெற்றுள்ளது.

-Mohamed Infas-

No comments:

Post a Comment

Pages