சக மாணவர்களின் பகலுணவை திருடி உண்ணும் அவலம் அரேங்கேறுகிறது இலங்கையில் - KALPITIYA VOICE - THE TRUTH

Post Top Ad

Tuesday, October 4, 2022

சக மாணவர்களின் பகலுணவை திருடி உண்ணும் அவலம் அரேங்கேறுகிறது இலங்கையில்

 


சக மாணவர்களின் பகலுணவை   திருடி உண்ணும் மாணவர்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பகலுணவை கொண்டுவரும் மாணவர்கள், பகலுணவை கொண்டுவருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

குருணாக்கல்லில் உள்ள பிரசித்திப் பெற்ற பாடசாலையில் தரம்-10லேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என அறியமுடிகின்றது. இதனால், சாப்பாடு கொண்டு வரும் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக இவ்வாறு பகலுணவு திருடப்படுவதாகவும், தங்களுடைய புத்தகப் பையில் வைக்கப்பட்டிருக்கும் சாப்பாடும் திருடப்படுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால், சிலர் பாடசாலைக்கு பகலுணவை கொண்டு வருவதை விரும்பவில்லை என்றும் அறியமுடிகின்றது.

சாப்பாட்டை களவெடுத்தும் உண்ணும் மாணவர்களுக்கு எதிராக மனிதாபிமானத்தை கவனத்தில் கொண்டு,  எவ்விதமான நடவடிக்கைக்கு எடுக்க முடியாதுள்ளது என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Newer Post Older Post Home

Post Bottom Ad

Pages