Puttalam Association Qatar அமைப்பின் ஏற்பாட்டில் கத்தார் வாழ் இலங்கையர்களுக்கான போட்டி நிகழ்வொன்று கடந்த 28ம் திகதி வெள்ளிக்கிழமை (28.10.2022) அன்று அபுஹமூரில் உள்ள கேம்பிரிட்ஜ் பாடசாலை வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
மிகவும் குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "GOLDEN GOAL - SEASON 1, Futsal Penalty Shootout Tournament 2022" நிகழ்வில் சுமார் 21 அணிகள் பங்குபற்றியிருந்தன.
மாணவன் உமைர் ஹம்தியாஸின் கிராஅத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் இலங்கையின் தேசிய கீதம் ஒலிக்கவிடப்பட்டது. போட்டியாளர்கள், பார்வையாளர்களென அனைவரும் சேர்ந்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து PAQ அமைப்பின் தலைவர் சகோதரர் சாஜித் ஜிப்ரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
எல்லோர் கரகோஷத்துடனும் உற்சாகமாக தொடங்கப்பட்ட போட்டி நிகழ்வுகள் மைதானத்தின் இரு பக்கங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்றன.
போட்டியின் ஒழுங்கு விதிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக சகோதரர் ஜஹாங்கீர் ரஃபீக் மற்றும் தஸ்தீக் நளீர் ஆகியோர் செயற்பட்டனர். முஹம்மத் அஸ்லியும், முஹம்மத் ஹம்தியாசும் இப்போட்டியை சிறப்பாக வழிநடாத்தினர்.
மேலதிகமாக கென்யா நாட்டைச் சேர்ந்த இரு நடுவர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
சகோதரர் ரஸ்லான் ஆகிப் இந் நிகழ்வினை அழகாக தொகுத்து வழங்கினார். PAQ வின் அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் ஏற்பாடுகளை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க உதவியாயிருந்தனர். CDF அமைப்பின் சார்பாக சகோதரர் ரிபாஸ் அவர்கள் புகைப்பட கலைஞராக செயற்பட்டார்.
Champions க்கான போட்டிக்கு Kalpitiya Football Club மற்றும் Haji 7 Football Club ஆகியன தகுதிபெற்ற நிலையில், அந்த இரு அணிகளுக்கும் மத்தியில் நடைபெற்ற போட்டியில் அதிரடியாக வென்று Haji 7 அணி Champions Trophy யை தனதாக்கிக்கொண்டது.
Best Goal Keeper ஆக Koi Star Kings அணியிலிருந்து சகோதரர் அஜ்மல் அவர்களும் Top Goal Score க்காக Haji 7 அணியிலிருந்து சகோதரர் Afros அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த இந் நிகழ்வில் சிறுவர் சிறுமியருக்கான போட்டி நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சிறுவர்களை உற்சாகமும் ஊக்கப்படுத்தும் விதமாகவும் அது அமைந்திருந்தது. குடும்பம் சகிதமாக வந்திருந்த உறவுகளுக்கு அது மகிழ்வான தருணமாக அமைந்திருந்தது. கலந்து கொண்டிருந்த சிறுவர், சிறுமியர் அனைவருக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
போட்டியில் Champion ஆகிய Haji 7 அணியினருக்கு PAQ வின் தலைவர் சகோதரர் சாஜித் ஜிப்ரி அவர்கள் வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார். பதக்கங்களையுடையவர்களுக்கு வந்திருந்த அதிதிகள் உட்பட PAQ வின் நிர்வாக உறுப்பினர்கள் அதனை அணிவித்தனர்.
Casmoria கழகத்தின் ஏற்பாட்டில் தற்காலிக சிற்றுண்டிக் கடையொன்றும் நிறுவப்பட்டிருந்தது. இவைகளுக்கு மத்தியில் உறவுகளோடு உரையாடல்கள், நண்பர்களோடு சந்திப்புக்கள் என கலகலப்பான ஒரு மாலைநேரமாக அன்றைய நாள் அமைந்திருந்தது.
இந் நிகழ்வின் அனுசரணையாளர்களான Laksiriseva Cargo, Lanka Restaurant, Aman Mobile Shop, Grace Limousine, HUB Consultancies & Professional Services, Pixel Creations, Asian Football Academy ஆகியோருக்கும்,
ஊடக அனுசரணையாளர்களான Sky Tamil Channel க்கும் Puttalam Association Qatar அமைப்பின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள், நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்கு பங்களிப்பு செய்த நண்பர்கள், கலந்து கொண்ட அணிகள், அனுசரணயாளர்கள், பார்வையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் PAQ வின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
சிறப்பாக நடந்து முடிந்த "GOLDEN GOAL - SEASON 1, Futsal Penalty Shootout Tournament 2022" நிகழ்வு அடுத்த Season க்கான மிகுந்த எதிர்பார்ப்புடன் இனிதே நிறைவுற்றது.
0 Comments