பிள்ளைகளுக்கு எப்போது பணம் கொடுக்க வேண்டும்? (பெற்றோர்களுக்கான அறிவுரை)


பேரண்டிங் வாட்ஸாப் குழுவில் பிள்ளைகளுக்கு வீட்டு வேலை செய்ய காசு கொடுப்பது பற்றி ஒரு விவாதம் வந்தது

ஒரு வீட்டில் இருந்தால் அதன் வேலைகளை பகிர்ந்து செய்வது அனைவரின் கடமை. சமைக்க அம்மாவுக்கு யாரும் காசு கொடுப்பது இல்லை, தோட்ட வேலை செய்ய அப்பாவுக்கு யாரும் காசு கொடுப்பது இல்லை. அப்புறம் பிள்ளைகளுக்கு மட்டும் எதுக்கு காசு?

முதலில் அவர்கள் வேலையை அவர்களை செய்ய சொல்லவேண்டும். உன் துணியை நான் துவைத்தாலும் நீ தான் மடிச்சு வைக்கணும், நீ சாப்பிட்ட தட்டை கழுவணும். அப்படியே வெச்சுட்டு எழுந்து போகக்கூடாது. போனால் நீ எடுக்கும்வரை அது அதே இடத்தில் தான் இருக்கும்

அதன்பின் பொதுவான வேலைகளை கற்றுக்கொடுக்கணும். தோசை வேணும்னா, காய்கறி நறுக்கி கொடு, கிட்சனை கூட்டு என பாக்கட் மணி கொடுப்பதும் அவசியம் இல்லை.

எமெர்ஜென்சிக்கு என ஒரு சின்ன தொகையை கொடுத்து வெச்சிருக்கணும். ஆனால் அது பாக்கட் மணி அல்ல. துணி, ஷூ என எதாவது வேண்டுமெனில் என்ன வேண்டும் என சொன்னால் பெற்றோர் வாங்கிக்கொடுத்தால் போதும்.

சிலர் "பையன்/பொண்ணு வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டான். அவன் சம்பளத்தை அவனே செலவு பண்னட்டும்" என்பார்கள். அப்படி கண்டுக்காம விட்டால் அது நல்லதுக்கு செலவு ஆகாது.

அதை வாங்கி, அவர்களின் ஓய்வுநிதி, கல்விநிதி என 100% சேமித்துவிடவேண்டும். வீட்டு செலவுகளுக்கு அதில் இருந்து எடுக்ககூடாது. அவங்க காசு நமக்கு வேண்டாம். ஆனால் அதை வெட்டியாக செலவு செய்யவும் அனுமதிக்ககூடாது

பணத்தை பொறுப்பா செலவு செய்ய கற்றுக்கொன்டபின் தான் அவர்களின் நிதிநிர்வாகத்தை மேலாண்மை செய்யும் பொறுப்பை அவர்களிடம் கொடுக்கவேண்டும்

சுதந்திரத்துக்கு சமமான விசயம் பொறுப்பு. பொறுப்பை கற்றுக்கொண்டபின் தான் அதற்கேற்ற அளவில் சுதந்திரம் கிடைக்கும். நிறைய சுதந்திரம் வேணும்னா, நிறைய பொறுப்பா இருக்கணும்

~ நியாண்டர் செல்வன் 

Post a Comment

0 Comments