மோரோக்கோ வீரர் Boufal தன் தாயாருடன் நடனமாடும் வீடியோ தான் இப்போதைய மீடியா சென்சேசன். இதை பார்க்கின்ற எல்லோருக்கும் தங்கள் தாய் போலவே அந்த அம்மா இருக்கிறார். அதனால் தான் என்னவோ எல்லோரும் அதை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இது போல பெரிதாக அறியப்படாத இன்னும் ஒரு மோரோக்கோ பெண்மணியும் இருக்கிறார். அவர் தான்
ஃபாத்திமா பின்ந் முஹம்மது அல்-ஃபிஹ்ரியா அல்-குரைஷியா (فاطمة بنت محمد الفهرية القرشية).( கொமன்டிலே அவர் படம் உண்டு. முகத்துக்கு ஹார்டின், இல்லாட்டி ரோஜாப்பூ ஏதும் அடிக்க னுமா ஃப்ரெண்ட்ஸ்?)
அக்காலத்தில் வாழ்ந்த மிகப் பெரிய செல்வச் சீமாட்டி. அவர் தான் உலகின் முதல் பல்கலைக்கழகத்தை கிபி 895 இல் Fez நகரத்தில் நிறுவினார், அது இப்போதும் மொராக்கோவில் உள்ளது.
University of al-Qarawiyyin பல்கலைக்கழகம் பெரிய பள்ளிவாசலில் ஒரு மதரசாவாகவே ஆரம்பித்தது. பின்னர் ஆண் பெண் இருபாலரும் கல்வி கற்கும் பல்கலைக்கழகமாக வளர்ந்தது. இன்றை உலகில், தொடர்ந்து இயங்கி வரும் மிகப் பழமையான கல்வி நிறுவனம் மற்றும் இஸ்லாமிய ஆய்வுகள், கணிதம், இலக்கணம், மருத்துவம் ஆகியவற்றில் பல்வேறு நிலைகளின் படி பட்டங்களை வழங்கிய உலகின் முதல் கல்வி நிறுவனம் என்ற கின்னஸ் உலக சாதனையையும், பெருமையும் இந்த பல்கலைக்கழகமே நிலை நாட்டி உள்ளது.
1969 ம் வருடம் அல் கராவியீன் மோரோக்காவின் தேசிய பல்கலைக்கழகங்களோடு இணைக்கப்பட்டது. 2016ல் நவீனமயமாக்கப்பட்டது. கட்டிடங்களின் கலை அம்சங்கள் மாறாமல், அப்படியே அதை புனரமைப்பு செய்தவர், வேறு யாருமில்லை, உலகப் புகழ் பெற்ற Aziza Chaouni எனும் பெண் கட்டிடக் கலைஞரே. இவரும் மோரோக்கோவை சேர்ந்தவர். கனடாவில் கட்டிடக்கலை பேராசிரியராக இருக்கிறார்.
இன்று வரையும், அதே பச்சை கூரையும் ஆயிரம் வருடங்கள் பழமையான கட்டிடங்களையும் பாதுகாத்து நவீனமயப்படுத்தி அடுத்தடுத்து சந்ததிகளுக்கு கையளித்த பெருமை அஸீஸாவையே சாரும். என்ன தான் நவீன மயப்படுத்தப்பட்டாலும், உஸ்தாதை சுற்றி அரை வட்ட வடிவில் மாணவர்களை உட்கார வைத்து தான் இப்போதும், அதே பழைய ஸ்டைலில் தான், அங்கே பாடங்கள் நடத்தப்படுகின்றனவாம்.
அது போல, இப்போது, 2022 ல் மீண்டும் ஒரு பெண் மோரோக்கோவின் நாமத்தை உலகெங்கும் எடுத்து சென்றிருக்கிறார். அவர் தான் Boufalன் தாயார்.
அப்படியானால், பெண்களை அடிமைப்படுத்துவது யார்? எது பெண் விடுதலை?
இந்த பல்கலை கழகம் குறித்து அறிய https://www.cnn.com/.../fez-al-qarawiyyin.../index.html
0 Comments