கூகிள் 12,000 பேரை சமீபத்தில் பணிநீக்கம் செய்தது. காரணம் என்ன தெரியுமா? சுந்தர் பிச்சை சொன்னது என்ன? (விபரம் இணைப்பு)


இதற்கு வருத்தம் தெரிவித்து சுந்தர் பிச்சை வெளியிட்ட அறிக்கை படுவித்தியாசமானதாக இருந்தது. பொருளாதார நெருக்கடியால் பணி இழப்பு செய்ததாக அவர் கூறவில்லை.
 
"ஆர்டிபிசியல் இண்டலிஜென்ஸ் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அது கூகிளுக்கு அளிக்கும் வாய்ப்பை பயன்படுத்தவே இந்த பணிநீக்கம்" என குறிப்பிட்டு இருந்தார்
 
கூகிள் வெறும் தேடுபொறிதான். ஆனால் ஏ.ஐ பயன்படுத்தி பல காரியங்களை செய்யமுடியும். உதாரணமாக கூகிளில் "லீவ் லெட்டர் மாதிரியை கொடு" என கேட்டு, அதை அடிப்படையாக வைத்து நாமே கடிதம் எழுதணும். ஆனால் ஏ.ஐயில் " துடியலூர் அரசு பள்ளி ஆசிரியருக்கு ஏழாம் வகுப்பு மானவன் உடம்பு சரியில்லை என சொல்லி எழுதுவது போல் ஒரு லீவ் லெட்டர் எழுது" என்றால் எழுதிகொடுத்துவிடும்.
 
ஆக ஏ.ஐயின் செயல்பாடு பரவினால் கூகிள் தேடுபொறி பெரிய அளவில் அடிவாங்கும். ஆனால் இனி ஏ.ஐயை எல்லாம் தடுக்கமுடியாது. ஏ.ஐயில் கவனம் செலுத்தவிருக்கிறோம் என்கிறது கூகிள்.
 
அதனால் சாப்ட்வேர் எஞ்சினியர்களை எல்லாம் மூட்டை கட்டி அனுப்பிவிட்டார்கள்.
 
நாலைந்து வருடங்களில் ஏ.ஐயிடம் ஒரு "பிஎச்டி தீசிஸ் எழுதிகொடு" என்றால் அதில் பெரும்பங்கை எழுதிகொடுத்துவிடும். மீதத்தை நாம எழுதிக்கவேண்டியதுதான்.
 
மக்களுக்கு பலவிதங்களில் நல்லது. ஆனால் கல்வி, சாப்ட்வேர் உள்ளிட்ட பலதுறைகள் இனி தம்மை மாற்றிக்கொள்ளவேண்டி வரும். மாணவர்களுக்கு எத்துறையை எடுத்து படித்தால் வேலை வாய்ப்பில் பிரச்சனை இருக்காது என எல்லாம் யோசிக்கும் அவசியம் இல்லை. ஏன் என்றால் எல்லா துறைகளிலுமே ஏ.ஐ கலகத்தை உண்டுபண்ணும்.
 
~ நியாண்டர் செல்வன்

Post a Comment

0 Comments