2019ம் ஆண்டு நிலவில் இருந்து எடுத்து எடுத்துவரப்பட்ட 0.2 கிராம் மண் ஏலம் விடபட்டது. எட்டு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கபட்டது


ஒரு கிராம் நிலவின் மண் மட்டும் ரூ. 40 கோடிக்கு விலை போகும் என கணிக்கிறார்கள். நிலவுக்கு போன விண்கலன்கள் இதுவரை சுமார் 190 கிலோ கிராம் மண்,பாறைகளை சுமந்துகொண்டு திரும்பியுள்ளன. அவை எதுவும் தனியாருக்கு விற்கபப்படவில்லை. அனைத்தும் விஞ்ஞானிகள் வசமே ஆய்வுக்கு உள்ளன.
 
ஆனால் அமேசானில் போய் தேடினால் நிலவு கற்கள், பாறைகளை ஆயிரம், இரன்டாயிரம் ரூபாய்க்கு வாங்கமுடியும். அவை நிஜமான நிலவின் கற்கள் தான். ஆனால் விண்கலன்களால் நேரடியாக கொண்டுவரபட்டவை அல்ல. விண்கற்கள் நிலவை தாக்கி, அதன் ஒரு பகுதியை சிதைத்து விண்ணில் தூக்கி எறிந்து பூமியில் வந்து விழுந்தவை. ஆனால் நேரடியாக கொன்டுவரபட்டவை அல்ல என்பதால் சந்தைமதிப்பு மிக குறைவே
 
நிலவின் கற்களுக்கே இப்படி..செவ்வாயின் கல் பூமியில் கிடைத்தால்?
 
செவ்வாயிக்கும் பூமிக்கும் இடையே 3.4 கோடி கிலோமீட்டர் தொலைவு உள்ளது. மிகப்பெரிய விண்கல் தாக்குதலில் செவ்வாயின் பகுதிகள் சிதறடிக்கப்பட்டு பூமியில் வந்து விழுந்துள்ளன. 175 விண்கல் துணுக்குள் இப்படி செவ்வாயில் இருந்து வந்தவையாக கண்டறியபட்டுள்ளன
 
செவ்வாய் கற்கள் இவை என எப்படி கண்டுபிடித்தார்கள்?
 
கற்கலின் கெமிக்கல்களை ஆராய்வது ஒருமுறை. ஆனால் கற்களுக்குள் இருக்கும் சிறு ஓட்டைகளில் காற்று புகுந்திருக்கும். நாள்போக்கில் அவை சீலிடபட்டு காற்று அப்படியே கற்களுக்குள் இருக்கும். சுமார் 140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் பூமியில் வந்து விழுந்து, இன்னும் செவ்வாயின் வளிமண்டலத்தின் சாம்பிளை தன்னுளே கொண்டிருக்கும் கற்கள் உள்ளன. அவற்றின் காற்றை ஆராய்ந்து, செவ்வாயின் வளிமண்டலத்தை ஒப்பிட்டால் போதும்.
 
ஆனால் நாசா வெளியிட்ட இன்னொரு தகவல் உலகில் உயிர்கள் தோன்றியதன் தியரியையே ஒரு உலுக்கு உலுக்கி எடுத்தது.
 
செவ்வாயில் இருந்து 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வந்து பூமியில் விழுந்த ஒரு விண்கல்லில் உயிர்கள் இருந்ததற்கான தடயம் உள்ளது என்பதே
 
அப்போது பூமியில் உயிர்கள் உருவாகி இருக்கவில்லை. செவ்வாயில் அப்போது தண்ணீர் இருந்தது. ஆறுகள், கடல்கள் இருந்தன. உயிர்கள் ஏன் செவ்வாயில் தோன்றி, விண்கல் மூலம் பூமிக்கு வந்து பூமியில் பரவி இருக்ககூடாது?
 
இது வெறுமனே யூகம் அல்ல. பன்டைய பூமியில் உயிர்கள் தோன்றும் அளவுக்கு பாஸ்பரஸ் இருக்கவில்லை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பாஸ்பரஸ் இல்லாமல் உயிர்கள் தோன்றி இருக்கமுடியாது. செவ்வாயில் அன்று ஏராளமான பாஸ்பரஸ் இருந்தது. அதனால் உயிர் செவ்வாயில் தோன்றி பூமியில் தழைத்தது என சொன்னால் பாஸ்பரஸ் பிரச்சனை வெகு எளிதில் தீர்ந்துவிடும்.
 
இந்த தியரியின் பெயர் Martian origin hypothesis
 
இது உண்மை என்றால் நாம் அனைவரும் மார்ஷியன்கள், ஏலியன்கள்
 
அதனால அடுத்தவாட்டி செவ்வாய் கிரகத்தை பார்க்கையில் "தாய் மண்ணே வணக்கம்"னு ஒரு கும்பிடு போட்டுடுங்க. 
 
~ நியாண்டர் செல்வன்

Post a Comment

0 Comments