நம்மூர்ல நாய் வளர்த்துவாங்க, பூனை வளர்ப்பாங்க. ஜப்பான்ல கோய் மீன் (Koi fish) வளர்ப்பாங்க (விலை 1.8 M) ஏன்?

 


மீன் வளர்ப்பது என்ன ஸ்பெசல்?நானும் தன மீன் தொட்டி வெச்சிருக்கேன்னு சொல்லக்கூடாது. ஜப்பான் கோய் மீன் வளர்ப்பு எல்லாம் 2கே கிட்ஸ் பாஷையில் சொல்லணும்னா வேற லெவல்

கொய் மீனின் நிறம் சிகப்பும், வெள்ளையும். ஜப்பானின் கொடி நிறமும் அதுதான் என்பதால் கோய் வளர்ப்பு நாட்டுபற்று மிகுந்த விசயமாக ஆகிவிட்டது. அரசு அலுவலகங்கள், பூங்காக்கள், வீடுகளில் எல்லாம் ரொம்ப சிரத்தை எடுத்து வளர்ப்பார்கள்.
அதுவும் சரியான நிறம், சரியான டிசைனில் அதன் முதுகில் இருக்கும் கோடுகள் இருக்கணும்னு சொல்லி தனியாக மீன்பண்ணைகள் அமைத்து வளர்ப்பார்கள். மிகுந்த தரமான கோய் மீன்கள் 15 கோடி ரூபாய் வரை ஏலம் போகும்.
நாய் வளர்ப்பு போட்டி மாதிரி கோய் மீன் வளர்ப்பு போட்டிகள் எல்லாம் நடக்கும். அதில் ஜெயிக்கும் மீன்கள் ஏலத்தில் கூடுதல் விலைக்கு எடுக்கபடும்,
அப்படி போட்டியில் ஜெயித்த மீன்களின் வம்சாவளி மீன்களும் நல்ல விலைக்கு போகும். இம்மாதிரி சூப்பர்ஸ்டார் மீன்களின் தாத்தா, கொள்ளூதாத்தா வரலாறு எல்லாம் பதிவேடுகளில் இருக்கும்.
ஒரு மீனுக்கு இத்தனை அலப்பறையா?
அதான் ஜப்பான்
~ நியாண்டர் செல்வன்

Post a Comment

0 Comments