கத்தார் பிஃரி வீசா! - ரமழான் முடியும் வரை அங்கு வருவதை தவிர்க்கவும்

 


தற்காலிக கம்பனிகள் அமைத்து அவற்குரிய தொழிலாளர் வீசாக்களை NOC கொடுத்து விற்றுவிடுபவர்கள் பலர் உலகக் கோப்பை நிகழ்வுகளுக்கு பின்னரும் குறைந்த விலையில் வீசா விற்பனை செய்வதாகவும் அவர்களை மாத்திரம் நம்ம்ம்ம்பி வந்த பின் உதவ எவருமின்றி தொழில் உத்தரவாதமின்றி கத்தார் வரவேண்டாம் என்றும் அங்கிருந்து செய்திகள் குரல் பதிவுகள் வந்த வண்ணமே இருக்கின்றன. 
 
அவ்வாறான கம்பெனிகள் பல NOC தருவதற்குள் பதிவை புதுப்பிக்காமல் தலைமறைவாகி விடுவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
 
பலர் வந்து மாதக்கணக்கில் தொழில் இல்லாமலும், ஏதோ கூலித் தொழில்களை தற்காலிகமாக செய்து கொண்டும் நிர்கதியில் இருப்பதாகவும் அறிய வருகிறது.
எனவே தொழில் உத்தரவாதமின்றி குறைந்த பட்சம் ரமழான் முடியும் வரை அங்கு வருவதை தவிர்க்குமாறு நண்பர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

Post a Comment

0 Comments