முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பெரும் அழிவை தடுத்து நாமெல்லாம் ஒன்று, உங்களில் நானும் ஒருவர் என்று கர்சித்த பெண் Jecinda Ardern


 நியூசிலாந்தின் முன்னால் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், தன் பதவிக்காலம் முடியுமுன்னரே தானாக முன்வந்து பதவி விலகினார். அதற்கு அவர் சொன்ன காரணம், தன் குடும்பத்துடன் தன்னால் நேரத்தை செலவழிக்க முடியவில்லையே என்ற கவலை தன்னை ஆட்பறித்தது என்பதாகும். 

 தன் மழலையின் சிரிப்போடு தானும் கலந்திருக்க வேண்டும் என்ற அவா தன்னை சூழ்ந்து கொண்டது என்பதை உணர்ந்து, பதவியை தூக்கி எறிந்தார். 

இவர் நாட்டின் பிரதமராக இருந்த போது, எத்தனையோ சவால்களை மிகவும் சாதுரியமாக எதிர் கொண்டு பல வெற்றிகளைக் கண்டவர். தற்கால உலக தலைவர்கள் தர வரிசையில் முதல் இடத்தில் இருந்தவர். 


இந்நாட்டில் வாழும் எல்லா இனத்தவர்களோடும் அன்போடும் சம நிலையோடும் நடந்து கொண்டவர். கோவிட் காலத்தில் எல்லா நாடுகளும் திகைத்து திக்கற்று நின்ற பொழுது, நியூசிலாந்து மட்டும் நிமிர்ந்து நின்றது. 

காரணம் இவரின் நிர்வாகத் திறமையும் அவர் மக்கள் மீது வைத்த வேண்டுகோளின் நம்பிக்கையுமாகும். 

அவர் சொன்னதை நாட்டு மக்கள் அனைவரும் கேட்டனர். எதிர் கடசிகள் கூட அவர் பின் அணிவகுத்தனர். முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பெரும் அழிவை தடுத்து நாமெல்லாம் ஒன்று, உங்களில் நானும் ஒருவர் என்று கர்சித்த பெண் சிங்கம். நடந்த கொடுமைக்கு நீதி கிடைக்கச் செய்த தனிப் பெரும் தங்கம். இந்த நாட்டின் சாதாரண குடிமகனும் நேரடியாகச் சென்று பார்க்க கூடிய எளிமைமிக்க தலைவி. 

உலக தலைவர்களெல்லாம் நிமிர்ந்து பார்த்து வணக்கம் செலுத்தப்பட்ட புதுமைப் பெண். 

தற்பொழுது நாட்டில் ஏட்படட சூறாவளி பூகம்பம் என்பவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவளிக்கும் சுயாதீன குழுவொன்றில், சாதாரண இடத்தில் சென்று அவர்களோடு சமையலுக்கு உதவிக் கரம் தந்துள்ளார். 

தலைவர்கள் என்றால் இப்படி இருக்க வேண்டும். ஈமான் இல்லாவிடடாலும் இஸ்லாமிய பண்புகள் நிறைந்திருக்கும் மனிதம் வாழும் நாட்டில், நானும் ஈமான் கொண்ட இஸ்லாமியனாக வாழ்வதை எண்ணி பெருமை கொள்கிறேன். 

 We Love You.

 

Munas Arafath Cassim

Post a Comment

0 Comments