அடுத்த வாரம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

 


சலுகை விலையில் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிப் புத்தகங்களை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

30 சதவீத சலுகை விலையில் இவ்வாறு பயிற்சிப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, பாடசாலை மாணவர்கள் அரசாங்க அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட அப்பியாசக் கொப்பிகளை விசேட சலுகையில் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி, அடுத்த வாரம் முதல் மாணவர்கள்  இலங்கையில் உள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக இந்த அப்பியாச கொப்பிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் மேலும் கூறினார். 


 

Post a Comment

0 Comments