காணாமல் போன மாணவி ரிகாஷா கண்டுபிடிப்பு

 


மன்னார் - முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவி காணாமல் போயுள்ள நிலையில்  நேற்று(19) மாலை புத்தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவி வியாழக்கிழமை (18) காலையிலிருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.

குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10   இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மாணவி காணாமல் போனது தொடர்பாக  பெற்றோர் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மாணவி நேற்று வெள்ளிக்கிழமை(19) மாலை புத்தளத்தில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில்,புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் தந்தை மேலும் தெரிவித்தார். 

Post a Comment

0 Comments