இலங்கையில் கறுப்பு பட்டியலுக்குள் இணைக்கப்பட்ட மருந்து


இலங்கையில் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் பயன்படுத்தப்படும் 'பிரெட்னிசோலோன்' என்ற கண் சொட்டு மருந்தை கறுப்பு பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரெட்னிசோலோன் கண் சொட்டு மருந்து தொடர்பில் பல சிக்கல்கள் பதிவாகியதையடுத்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதனை பயன்படுத்துவதை நிறுத்துமாறு அனைத்து வைத்தியசாலைகளுக்கும் சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்திருந்தது.

இந்தநிலையில் இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வக சோதனைகள், இந்த கண் சொட்டு மருந்து மாசுபட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments