அனைவராலும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் (வீடியோ இணைப்பு)

 


இறுதியாக வாட்ஸ்அப் நிறுவனமானது பயனர்கள் அனைவராலும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட அம்சத்தை வெளியிட்டுள்ளது.

Android மற்றும் IOS சாதனங்களில் வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்திகளை மாற்றியமைக்கும் (Edit)வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என வாட்ஸ்அப்பின் தலைமையகமான மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அனுப்பப்பட்ட ஒரு குறுஞ்செய்தியை 15 நிமிடங்களுக்குள் மட்டுமே திருத்தமுடியும் அதன் பிறகு அதைத் திருத்த முடியாது.

ஒரு குறுஞ்செய்தியானது திருத்தப்பட்ட பின் (edited) என்று அடையாளப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட குறுஞ்செய்தியை நீண்ட நேரம் அழுத்தி, மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, பின்னர் "Edit" என்பதைத் தெரிவுசெய்யும்போது அதை மாற்றியமைக்க முடியும்.

இந்த செய்தி திருத்தத்தை பல முறை செயற்படுத்திக்கொள்ளலாம்.

இந்த அம்சத்தை பெறுவதற்கு தங்கள் வாட்ஸ்அப் செயலியை புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment

0 Comments