குடிபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட இரண்டு சிறுமிகள் உட்பட ஆறு பேர் கைது

 


பாணந்துறையில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் குடிபோதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட இரண்டு சிறுமிகள் உட்பட ஆறு பேர்  கைது செய்யப்பட்டதாக பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மைனர் பெண்கள்(சிறுமிகள்), ஒரு ஆண், ஒரு இளம் பெண் மற்றும் இரண்டு இளைஞர்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் மது அருந்திய   குழுவொன்று அநாகரீகமாக நடமாடுவதாக பிரதேசவாசிகளின் தொலைபேசி அழைப்பின் பேரில் உடனடியாக செயற்பட்ட பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி இவர்களை கைது செய்துள்ளார்.

பொலிஸாரை கண்டதும் காரில் ஏறி தப்பிக்க முற்பட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று சிறுமிகளும் நாகரீகமற்ற ஆடைகளை அணிந்துள்ளதாகவும், அவர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments