கதை உண்மையில் சுவாரசியமானது. முதன் முதலில் சரியான நேரத்தை சொல்வதற்காகவே வானொலி பயன்பட்டது. நேர சமிஞ்சைகள் மட்டுமே வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டன. அதன் பின் அதனோடு சேர்த்து மணித்தியால செய்திகள். முக்கியமான தகவல்கள். ஏனெனில், அப்போது உலகம் முழுவதும் இருந்த மொத்த மணிக்கூடுகளின் எண்ணிக்கை, இப்போது நம்மில் ஒருவருடைய வீட்டில் இருக்கும் மணிக்கூடுகளின் எண்ணிக்கையை விட குறைவாகவே இருந்தது.( இப்போது உங்கள் வீட்டில் எத்தனை மணிக்கூடுகள்( நேரம் அறிய பயன்படும் சாதனங்கள்) இருக்கின்றன என்று எண்ணிப்பாருங்கள். 20?. 30?)
லண்டனில் உள்ள, உலகப் புகழ் பெற்ற பிக் பென் (Big Ben) கடிகாரத்தின் மணியோசயோடு தான் பிபிசி ஐரோப்பா முழுதும் செய்திகளை ஒலிபரப்பு செய்தது. அந்த டிங்ங்ங் டிங்ங்... மணியோசை தான் செய்திகள் தொடங்கும் சமிக்ஞை ஒலியாக ஒலிபரப்பானது. அந்த ஸ்டைலேயே பிற்காலத்தில் எல்லா வானொலி நிலையங்களும் பின்பற்றவும் தொடங்கின.
இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லரின் நாஜி படைப் பிரிவில் கடமை புரிந்த பௌதீகவியல் அறிஞர்கள், பிபிசி லைவ் ஒலிபரப்பு செய்யும் அந்த பிக் பென் கடிகாரத்தின் ஓசையில் உள்ள துல்லியமான வேறுபாடுகளை கணித்து அதன் மூலம் லண்டனில் காற்று வீசுகிறதா, மழை பொழிகிறதா, பனிமூட்டம் இருக்கிறதா, போன்ற காலநிலை தகவல்களை ஊகிக்க கற்றுக் கொண்டனர். சபாஷ். கற்றுக் கொண்டதோடு மாத்திரம் நிற்கவில்லை, அந்த தகவலை ஜெர்மனிய வான் படையிருக்கும் தெரிவித்தனர். இதன் மூலம், ஜெர்மனிய விமானங்கள் லண்டனுக்கு எப்போது பறக்க வேண்டும்?, எத்தனை மணிக்கு பறக்க வேண்டும்? என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க இந்த தகவல் மிகவும் உதவி புரிந்தது.
பல வருடங்களுக்கு பிறகு தான், இங்கிலாந்து உளவுப் பிரிவினருக்கு இந்த தகவல் தெரிய வந்தது. அதன் பின்னரே, பிபிசி ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிலையக் குறியீட்டு இசையை- மணியோசையை செய்தி அறிக்கைகளுக்கு முன் ஒலிபரப்பும் , அதன் பின்னர் நேரத்தை சொல்லும் வழக்கத்தை ஆரம்பித்தது. அதுவே இன்று வரை அப்படியே நிலைத்து நிற்கிறது.
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
#வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே அது போல தான் விஞ்ஞானமும்.
0 Comments