புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரிச் சங்கம் (PUTWA) புத்தளம் நகர சபை செயலாளர் திருமதி பிரீத்திகா அவர்களுடன், 22.05.2023 ஆம் திகதி நகர சபையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, நகர சபையின் செயலாளர் இதனை தெரிவித்தார்.
“வர்த்தக அனுமதி பத்திரம் (Trade License) பெற்றுக்கொள்ளும்போதும் அதை வருடாந்தம் புதுப்பிக்கும்போதும் நகர சபையினால் வசூலித்த மேலதிக கட்டணங்கள் (Additional/Service Charges) இரத்துசெய்யப்பட்டுள்ளது. எனவே வர்த்தக அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதுமானது” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இச்சந்திப்பின்போது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன:



இவற்றுடன் நகரின் பாதுகாப்புக்காக CCTV பொருத்துதல் மற்றும் பராமரித்தல், நகரத்தை அழகூட்டுவதற்காக தபால் அலுவலக சுற்று வட்டத்தில் டிஜிட்டல் கடிகாரம் பொருத்துதல் போன்ற பல விடயங்கள் ஆராயப்பட்டன.
புத்தளம் நகர சபையின் செயலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடல் புத்தளம் நகரின் வர்த்தக வணிக நடவடிக்கைகள் தொர்பில் முன்னேற்றகரமான எட்டாக குறிப்பிட முடியும்.
Hisham Hussain
Convener
Puttalam United Trade Welfare Association,
Puttalam
23.05.2023
0 Comments