(கற்பிட்டி) புத்தளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் அழகிய கிராமம். நாம் அனைவரும் அன்புடன் வாழ்கின்ற வளமிகு ஊர்.
கால சுழற்சிக்கு ஏற்ப மாற்றமடையும் வாழ்க்கை சக்கரத்தில் நாம் எல்லோரும் சுழல்கின்ற போதும் எமது ஊரின் மண் வாசனை மறக்க முடியாத ஒன்றே. நாம் எல்லோரும் ஊரினை விட்டு வெகுதூரத்தில் வாழ்ந்து வருகின்ற போதும் நாம் சிறு பிராயத்தில் ஓடி விளையாடிய வீதிகளும் விளையாட்டுமைதானங்களும் எமது மனத்திரையில் இடை இடையே வந்து நினைவாக நின்றுமறையாமல் பூரிப்பை ஏற்படுத்துகின்றன.
எமதூர் வளர்ச்சி எனும் போது நடந்த பலவற்றையும் தற்போது நடந்து வருகின்ற பல செயல்களை பற்றியும் அதற்காக உழைப்பவர்களையும் உழைக்கின்றவர்களையும் குறிப்பிடலாம். இவ் இணையதள உருவாக்கத்தின் நோக்கம் எம்முடன் வாழ்ந்த வாழ்ந்து வருகின்ற சேவை நோக்கர்களின் பெருமையை பறை சாற்றுவதும் கிராம பாரம்பரிய கலைகள், உள்நாட்டு, சர்வதேசம், விளையாட்டு, சமூகம் பற்றி எடுத்தியம்புவதும் எமது மக்களின் உணர்வுகளுடன் உறவாடும் நிகழ்வுகளை ஒவ்வொருவரும் அறிந்து உவகை அடைவதற்கும் ஆகும்.
இதன் மூலம் நாம் அனைவரும் ஓர் இறுக்கமான அன்புக் கட்டுக்குள் வரமுடியும். இந்த வகையில் எமது மக்கள் தற்போது நாட்டிற்கு நாடும் இடத்திற்கு இடமும் பரந்துபட்டு வாழ்ந்து வருவதனால் நாம் எல்லோரும் ஒவ்வொருவரினதும் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வது கடினமாக உள்ளது. எனவே இதனை எமது இணையத்தள நிர்வாகம் கருத்திற் கொண்டு விளம்பரங்கள் பகுதியூடாக ஒவ்வொரு மக்களினுடைய சுக துக்க நிகழ்வுகளை காட்சிபடுத்த எல்லோரும் அதனை அறிந்து கொண்டு ஒருங்கிணைந்த வாழ்வினை வாழ ஏற்பாடு செய்துள்ளது. இதற்கமைய நீங்கள் உங்கள் நிகழ்ச்சிகளை எமது மின்னஞசலுக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது நீங்களே நேரடியாக பதிவு செய்யலாம். உங்கள் வசதிகேற்ப அனைத்து நவீன உக்திகளை பயன் படுத்தி உள்ளோம் எமது இணையதளத்தில்.
பதிவு செய்யும் விபரம் இத்தளத்திலேயே காணப்படுகின்றது. நாம் இணைத்துள்ள இவிணைப்புடன் அறிந்து கொள்ளுங்கள். இந்த இணையத்தளம் மேலும் பல தகவல்களுடன் உலா வர உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஊர் பற்றிய விபரங்கள் உறுதிப்படுத்திய ஆவணங்களுடன் உங்களிமிருந்து பெறப்பட்டு இவ்விணையதளத்தில் அரங்கேற்ற உத்தேசித்துள்ளோம். எமக்கு இவற்றினை தெரிவிக்க விரும்பின் எமது மின்னஞ்சல் மூலம் எமது நிருவாகத்தினைரை தொடர்பு கொள்ளுங்கள்.
முக்கிய குறிப்பு : கற்பிட்டியின் குரல் இணையத்தளமானது , தனது செய்தி தயாரிப்பு மற்றும் செய்தி ஆய்வு ஆகிய செயன்முறைகளின் போது, சமாதனம் மற்றும் மனித உரிமைகள் ஆகிய கோட்பாடுகளுக்கிடையிலான தொடர்பு மற்றும் இவ்விரு கோட்பாடுகள் மற்றும் தொடர்பாடல் உரிமைகள் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பு ஆகியவற்றின் பின்னணியில் நேர்மை, துல்லியம் மற்றும் சமநிலை ஆகிய ஊடகவியல் நெறிமுறைகளின் பால் வலுவான பற்றுதியினை கொண்டிருக்கிறது.
- நிருவாகம் -
To: kv.humanresource@gmail.com
Cc: editor@kalpitiyavoice.com
இப்படிக்கு
KV பிரதம செய்தி ஆசிரியர்.
KV Twitter : www.twitter.com/kalpitiyavoice
KV Fb Like : www.facebook.com/kalpitiyavoice
KV Fb Group : www.facebook.com/groups/kalpitiyavoice
KV Youtube : www.youtube.com/kalpitiyavoice
KV Ustream : www.ustream.tv/channel/kv-stream
1 Comments
Nihara
ReplyDeleteNehara